SHAHID – விமர்சனம்!!

Shahid-Movie-Poster

இந்தியில் எப்போதும் நல்ல படங்களையே எடுத்து ஆஸ்கார் விருது முதல் இந்தியாவில் வழங்கப்படும் தேசிய விருது வரை பரிந்துரைக்க தகுதி உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் யுடிவி மோஷன் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் ஒரு படத்தை தற்போது வெளியிட முன்வந்துள்ளது. அந்த படம் ஷாஹித். இந்தியில் வித்தியாசமான படங்களை இயக்கம் அனுராக் காஷ்யாப் தயாரித்துள்ளார். இயக்குனர் ஹன்சல் மேத்தா இயக்கியுள்ளார். இவர் முன்னர் “Dil pe mat le yaar”, Chaal போன்ற படங்களை இயக்கியவர்.

2௦1௦-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட வக்கீல் மற்றும் சமூகவாதி ஷாஹித் அஸ்மியின் வாழ்க்கைதான் இந்த ஷாஹித். இவரின் இளமைக்காலம் முதல் படுகொலை செய்யப்பட்டது வரை இவரின் மொத்த வாழ்க்கையையும் திரையில் அனைவரும் பார்க்கும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் ஹன்சல் மேத்தா. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக பார்க்கிறோம் என்று எண்ணாத அளவுக்கு ஒரு தேர்ந்த திரைக்கதையின் மூலம் ரசிகர்களை இரண்டு மணி நேரம் திரையரங்கில் கட்டி போடுகிறது இயக்குனரின் உழைப்பு.

ஒரு சமூக சிந்தனையாளராக உருவெடுத்து ஒரு தனி மனிதனின் உரிமைக்காக போராடும் தருணத்தில், நீதியை நிலைநாட்ட தன இன்னுயிரையும் நீத்த ஒரு மகத்தான மனிதனின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டுகிறது. இந்த படத்தில் ஷாஹித் ஆக நடித்துள்ளார் ராஜ்குமார் யாதவ் என்று சொல்வதை விட வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு பிரேமிலும் அதன் உழைப்பு தெரிகிறது.

மேலும் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் தங்களின் முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர். இந்த மாதிரி படத்திலும் கூட சிரிக்க வைக்க முடியும், அழ வைக்க முடியும் என்பதை காட்சிகளின் மூலம் நிரூபித்துள்ளார் இயக்குனர் ஹன்சல் மேத்தா.

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் வெளியிடும் இந்த படம் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.