About Time – விமர்சனம்!!

About Time-Image-1

கோலிவுட்டில் தான் தற்போது காமெடி ட்ரெண்ட் என்றும், காமெடி படங்கள் அதிகம் தயரிக்கபடுகின்றன என்று தான் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். அது தவறு. ஆம் ஹாலிவுட்டில் கூட நிறைய காமெடி படங்கள் படையெடுத்து வருகின்றன. அப்படி வந்துள்ள ஒரு படம் தான் About time.

கால வரையறைக்குள் கட்டுப்படாமல், கால நேர கட்டயதிற்கு அப்பாற்பட்டு பயணம் செய்யும் திறன் உள்ளது நாயகன் TIM-க்கு. இருபத்தொரு வயதில் இதனை உணரும் நாயகனுக்குள் காதல் உருவாகிறது. இந்த நேரத்தில்தான் இந்த திறன் தன் குடும்பம் முழுதுக்கும் உள்ளது என்பதை அறிகிறான். மேலும் காதல் அரங்கத்தில் காலடி எடுத்து வைத்து தனக்கென சரியான ஒரு காதலியை தேடி அலைகிறான்.

வக்கீலாக பயிற்சி எடுக்கும்போது Morry என்றொரு அழகியை சந்திக்கிறான். இருவரும் காதல் வயப்படும்போது இந்த சக்தியினால் தனக்கு ஏற்படும் பயன்கள் போலவே ஒரு புறம் பிரச்சினைகளும் உருவாகிறது. வாழ்க்கை என்பது இப்படிப்பட்ட சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது, அவரவர் தான் அதனை வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதை உணர்கிறான்.

இந்த படம் காதல் ஜோடிகளுக்கு நிச்சயம் ஒரு இனிமையான அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. Universal Pictures தயாரித்துள்ள இந்த படத்தை ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.