“லைப் ஆப் பை” போல உணர்வுபூர்வமான உயிர்போராட்டம் “ராவண தேசம்”

01

திரு.கே.ஜெகதீஸ்வரரெட்டி அவர்கள் நல்லாசியுடன், நியூ எம்பயர் செல்லுலாய்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக லஷ்மிகாந்த தயாரிக்கும் படம் “ராவண தேசம்”. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து, எழுதி இயக்குபவர் அஜெய். கதாநாயகியாக நடிப்பவர் ஜெனிபர்.  அல்லலு ரமேஷ், சந்தோஷ் கௌடில்யா, பாரதிராவ், சிரீஷா, பிரபாகர் மற்றும் மைனர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – வி.கே.ராம்ராஜ். இசை – ஆர்.சிவன்.

படம் பற்றி இயக்குனரும் நடிகருமான அஜெய் நூத்தகி கூறும்போது, “இது நடந்த நிஜ சம்பவம். ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கும் போது தங்களை காத்துக்கொள்ள வேண்டி நடக்கும் போராட்டக்களமே கதை கரு. கடல் வழியாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள படகில் தப்பிக்கும் ஒரு கும்பலின் உணர்ச்சிமிகு போராட்டம் தான் “ராவண தேசம்”.

கடல் மீது நடந்த சம்பவங்களின் தொகுப்பான “லைப் ஆப் பை” எப்படி ஒரு உணர்வு பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தியதோ அதற்க்கு நிகரான பாதிப்பை உணர்வில் பதிக்கக்கூடிய படைப்பாக ராவண தேசம் இருக்கும். இதில் காதல், எமோஷன்ஸ், காமெடி, ஆக்ஷன், பொழுதுபோக்கு என எல்லா அம்சங்களும் இதில் இருக்கிறது.  மேலும் தரை மேல படமெடுப்பது கூட ஈசி போல. ஆனா தண்ணி மேல அதாவது கடல் மேல படமெடுப்பது எவ்வளவு கஷ்டம்னு ரொம்பவும் உணர்ந்து விட்டோம் என்றார் அஜய் படபடப்புடன்.