தம்மு, தண்ணி இல்லாமலும் ஒரு கல்லூரி காதல் கதை!!

Ennai-Piriyadhey-Movie-Photostills-Gallery-15_S_116அம்மு சினி ஆர்ட்ஸ் கோவை.P.நேருஜி, N.பார்த்திபராஜன் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் பொன்.மணிகண்டன் இயக்கும் படம் “என்னை பிரியாதே”. இப்படத்தை பொன்.மணிகண்டன் இயக்குகிறார். இவர் பல இயக்குநர்களிடம் இணை இயக்குநராக இருந்தவர்.

முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் வளர்ந்து வரும் இப்படத்தில் முதல் நாயகனாக ரத்தன் மௌலி, இரண்டாவது நாயகனாக அவர் நடிக்க நாயகியாக ஷாமிலி நாயர், ரம்யா நரசிங்கர் நடிக்கிறார்கள். அதிரடி வில்லனாக அதிரவன் மிரட்டுகிறார். முழுக்க முழுக்க கல்லூரி மற்றும் குடும்ப பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் காதல் கதையாக “என்னை பிரியாதே” இருக்கும்.

நட்பும் காதலும் இருவேறு ரகமான உறவுகள், உணர்வுகள். இரண்டுக்கும் போட்டி வைத்தால் எந்த உணர்வு ஜெயிக்கும்? இரண்டுக்குமான வலிமை எப்படி வேறுபடுகிறது?, நட்புக்குள் காதலும், காதலுக்குள் நட்பும் நுழையும் போது எப்படி நட்பும், காதலும் பாதிக்கப்படுகிறது. இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும் கதையைக் கொண்ட படம்தான் “என்னை பிரியாதே”.

கதை நிகழ்விடம், கோவையும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளும். எனவே கோவை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. 45 நாட்களில் பாடல், சண்டை உள்பட படக்காட்சிகளை முடித்து அறிமுகப் படத்திலேயே தயாரிப்பாளரின் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்டார் பொன்.மணிகண்டன்.

கல்லூரி மாணவர்கள் தொடர்புடைய கதை என்றாலே. அவர்களை புகைப்பிடிப்பவர்களாகவும், மது குடிப்பவர்களாகவும் காட்டுவது சினிமாவில் சகஜமாகி வருகிறது. ஆனால் இப்படத்தில் புகைக்கிறமாதிரி குடிக்கிற மாதிரி ஒரு காட்சி கூட வைக்கவில்லை இயக்குநர்.

“சினிமா வலிமைமிக்க சாதனம். இதன் மூலம் நல்லது சொல்லி நன்மை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. கெட்டது செய்து தீமை செய்யாமல் இருக்க வேண்டும். சமூகம் புகையாலும் மதுவாலும் சீர்கெட்டு கிடக்கிறது. இதை மேலும் நான் கெடுக்க விரும்பவில்லை. இந்தப் படத்தின் கதை நாகரீகமாகவும் கண்ணியமாகவும் இருக்கும். திரைக்கதை வேகமாகவும் இருக்கும்.” என்கிறார் இயக்குநர் பொன்.மணிகண்டன்.

படத்துக்கு ஒளிப்பதிவு – பிரம்ம ஸ்ரீரவி, இசை – ஏ.எல்.எஸ்.வேலன், பாடல்கள் – அண்ணாமலை, வே.பத்மாவதி, பொன்.மணிகண்டன், படத்தொகுப்பு – அண்ணாதுரை, நடனம் – ராக் சங்கர், ஸ்டண்ட் – ஜேசுதாஸ். கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் – பொன்.மணிகண்டன்.

படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. “என்னை பிரியாதே” அக்டோபரில் வெளியாகிறது.