ரிட்டிக் விமர்சனம்!

riddick-vin-diesel-image2
ஃபாஸ்ட் அண்ட் பியுரியஸ் படங்களின் அசத்தல் ஹீரோ ‘வின் டீசல்’ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ரிட்டிக். அசத்தலான பாண்டஸி திரைப்படம் தான் இந்த ரிட்டிக்.

படத்தின் கதை, நாயகன் ரிட்டிக் (வின் டீசல்) ஒரு வேற்று கிரகவாசி. முந்தைய பாகத்தில் தன் கிரகத்தை விட்டு வேறு கிரகத்தில் வந்து சிக்கி கொள்கிறான் ரிட்டிக். அந்த கிரகத்தில் தாள முடியாத வெப்பநிலை நிலவுகிறது. அந்த வெப்பநிலையில் இருக்கும்போது அவசர ஒளிகாட்டி ஒன்று உயிரினம் உலவும் தகவல்களை அனுப்புகிறது. அந்த அவசர ஒளிகாட்டி இரண்டு ஸ்பேஸ் ஷிப்களை இயக்குகிறது.

அந்த இரண்டு கப்பல்களில் ஒன்றிற்கு கூலிப்படை சிப்பாய் ஒருவன் தலைவனாக இருக்க, மற்றொரு கப்பலுக்கு ரிட்டிக்கின் முன்னாள் சகா ஒருவனும் தலைவனாக இருக்கிறார்கள். அப்போது மழை பெய்ய ஆரம்பிக்க, வெப்பநிலையால் பதுங்கி இருந்த சில மிருகங்கள் வெளியே வருகின்றன. அதனிடமிருந்து எப்படி தப்பித்தார்கள், அனைவரும் தப்பினார்களா? என்பதே கதை.

வின் டீசல் அசத்தலான நடிப்பு. முதல் இருபது நிமிடங்கள் எந்த ஒரு வசனமும் இன்றி அவரின் ஒவ்வொரு செய்கையுமே காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. அந்த மிருகங்களுடன் அவர் சண்டை போடுவது சூப்பர். தன் தலையை எடுக்க நினைக்கும் வில்லனின் தலையை எந்த வித ஆயுதமும் இல்லாமல் எடுப்பது மிரட்டல்.

கார்ல் அர்பன், கடி ஷகொப்ப் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். டேவிட் த்வோஹி, ஜிம் வ்ஹீட் உடன் இணைந்து எழுதிய கதையை அற்புதமாக இயக்கியுள்ளார். ஜீன் ஆண்ட்ரி கார்ரியர்-ன் அரங்க அமைப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. கிரீம் ரேவேல்-ன் இசை நன்று. படத்தில் வரும் அந்த லோகாஷன்களும் சரி, மிருகங்களும் சரி, கிராபிக்ஸ் காட்சிகளில் சிறப்பாக அடிவமைக்கபட்டுள்ளன.

வித்தியாசமான கதைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களை நிச்சயம் திருப்திபடுத்தும் இந்த ரிட்டிக்.