மைனா, சாட்டை வரிசையில் உருவாகி வரும் மொசக்குட்டி!

files.php

மைனா படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களுள் ஒன்றான நீயும் நானும், சாட்டை படத்தில் இடம்பெற்ற “சகாயனே” பாடல் உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், அடுத்ததாக ஷாலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா, மகிமா, பசுபதி, எம் எஸ்.பாஸ்கர் நடிக்கும் “மொசக்குட்டி” படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.

“கள்ளப் பயலே கள்ளப் பயலே” என்ற பாடலை ரமேஷ் விநாயகம் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடி இருக்கிறார். ஜான் மேக்ஸ் தயாரிப்பில் எம்.ஜீவன் இயக்கி உள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மைனா, சாட்டை போன்ற சூப்பரான கதையம்சத்துடன் மொசக்குட்டி உருவாகி வருகிறது என்கிறார் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்.