மௌனராகத்தின் மறுபதிப்பா ராஜா ராணி? என்ன சொல்லப்போகிறார் மணிரத்னம்??

MAni atlee

ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘ராஜா ராணி’. ஷங்கரின் உதவியாளர் அட்லீ இயக்கி உள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார்.

இந்த படத்தை ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே படத்தை சிறப்பாக உருவாக்குவதை விட, விளம்பரங்களை உருவாக்குவதையே குறிக்கோளாய் கொண்டிருந்தனர் படக்குழுவினர். பூஜைக்கு நடிகர் கமலஹாசனை அழைத்து அதை பெரிய விளம்பரமாக்கினர்.

பின்னர் ஏற்கனவே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நயன்தாரா காதல் விவகாரத்தை மனதில் வைத்து ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் என்று வீண் விளம்பரம் தேடினர். இது பலருக்கும், ஏன் நாயகி  நயன்தாராவுக்கே எரிச்சலை ஏற்படுத்தியது.

மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இசை வெளியீட்டுக்கு அழைப்பது போல, அவருடன் புகைப்படங்கள் எடுத்து மற்றுமொரு பெரிய விளம்பரத்தை தேடிகொண்டனர்.

ஆர்யாவும், நயன்தாராவும் திருமணமான ஜோடியாக இந்தப் படத்தில் பக்காவாக நடித்திருக்கிறார்களாம். ஜெய், நஸ்ரியா, சந்தானம் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

“திருமணத்துக்குப் பின் நடக்கும் இனிமையான சம்பவங்களை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும்” என்கிறார் அட்லீ. ஆனால் படத்தில் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் இளம் தம்பதிகள் பார்க்கும் வகையில் மட்டுமே அமைந்துள்ளதாம். திரைக்கு வெளியே ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் இருக்கும் நெருக்கம், ரசிகர்களிடையே படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருக்கிறதாம்.

இது தவிர மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தை அப்பட்டமாக காப்பி அடித்துள்ளனர் என்கிறது ஒரு தரப்பு. இளம் தம்பதிகளின் விவாகரத்து பற்றி விரிவாக விளக்குகிறதாம் இப்படம். மௌன ராகம் கதையும் கிட்டத்தட்ட விவாகரத்து கோரும் மனைவியை பற்றியது தான். அதே கதையில் சிற்சில மாற்றங்களை செய்து ராஜா ராணி என்ற பெயரில் எடுத்துள்ளர்களாம். மணிரத்னத்திடம் அனுமதி பெற்றிருப்பார்களா என்பது கேள்விக்குறி தான்?..

தலைவா படம் காப்பி தான் என்றாலும் டைட்டிலில் மணிரத்னம், ராம் கோபால் வர்மா ஆகியோருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்திலும் அது போன்ற நன்றி வாசகம் (நன்றி : மணிரத்னம்) இடம் பெறுமா?