சென்னை துறைமுகம் – மதுரவாயல் மேம்பால பணியை மீண்டும் தொடங்கி பாலத்தை விரைவில் முடிக்கக் கோரி தி.மு.க’வினர் போராட்டம் – புகைப்படம் & காணொளி:

IMG_6073
சென்னை மதுரவயல் முதல் சென்னை துறைமுகம் வரை சுமார் ரூ.1,815 கோடி செலவில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள கூவம் நதிக்கரையில் கண்டைனர் லாரிகளின் விரைவு போக்குவரத்துக்காக சென்ற தி.மு.க ஆட்சியில் மத்திய அரசால் மேம்பால பணி தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியுற்று அ.தி.மு.க வெற்றி பெற்றது. சென்ற த.மு.க ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தலைமை செயலகம், அண்ணா நுற்றாண்டு நினைவு நூலகம், சென்னை துறைமுகம் – மதுரவாயல் மேம்பால பணி மற்றும் பல பணிகள், அ.தி.மு.க அரசினால் பல காரணங்கள் சொல்லி முடுகப்பட்டன.

இன்று (17 ஆகஸ்ட் 2013)சென்னை நெற்குன்றத்தில் த.மு.க’வினர் சுமார் 5000 பேர் சென்னை துறைமுகம் – மதுரவாயல் மேம்பால பணியை மீண்டும் தொடங்கி பாலத்தை விரைவில் முடிக்க கோரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தி.மு.க’வின் துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கினார். போராட்டத்தில் வட சென்னை மாவட்ட கழக பொருளாளர் ஆர்.டி.சேகர், தென் சென்னை மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முன்னால் சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணி, முன்னாள் சட்டமன்ற உறுபினர்கள் ப.ரங்கநாதன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சன், கே.கே.நகர் தனசேகரன், முகப்பேர் எம்.ஈ.சேகர், முகப்பேர் நீலகண்டன் நெற்குன்றம் ப.ஆலன் மற்றும் பலர் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட த.மு.க’வினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு முகப்பேர் மற்றும் வில்லிவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைகப்பட்டுள்ளனர்.

தி.மு.க’வின் இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு செவி சாய்குமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.