Turbo 3D – விமர்சனம்!

Turbo-Poster-Camp-D

Croods, Epic என 3D அனிமேஷன் படங்களின் மூலம் தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த Fox Star Studios நிறுவனத்தின் அடுத்த படைப்பு Turbo. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஒரு நத்தை. அதாவது வீட்டு தோட்டத்தில் ஊர்ந்து செல்லும் ஒரு நத்தை. அந்த நத்தைக்கு கார் ரேஸ் என்றால் கொள்ளை பிரியம். தோட்டத்தின் அருகில் உள்ள வீட்டில் உள்ள டிவியில் கார் ரேஸ் பார்த்து விட்டு செல்லும். தானும் ஒரு ரேசர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறது நத்தை.

என்ன தான் ஆசைப்பட்டாலும், எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும் நத்தையால் அதை சாதிக்க முடியவில்லை. சோகமாக மழையில் நனைந்து கொண்டு தனிமையில் செல்கிறது. அப்போது ஓரிடத்தில் நடக்கும் விபத்தால் நத்தை ரேஸ் காரின் உள்ளே பொய் நைட்ரஸ்-ல் மூழ்குகிறது. அப்போது வெளியே வந்த பின் அதற்கு ஒரு பெரிய சக்தி கிடைக்கிறது. அதாவது ரேசர் போல வேகமாக செயல்பட முடிகிறது.

அந்த சக்தி கிடைத்த சந்தோஷத்தில் இருக்கும் போது ஒரு ட்ரக் டிரைவரின் கையில் சிக்குகிறது Turbo-வும், அதன் சகோதரர் Chet-ம். அவர் அந்த நத்தைகளை எடுத்து கொண்டு போய் நத்தை ரேசில் கலந்து கொள்ள வைக்கிறார். அதில் Turbo-வின் அபார திறமையை உணர்ந்த அவர், Turbo-வை இண்டியானாபோலிஸ்-ல் நடக்கும் Indi-500 ரேசில் கலந்து கொள்ள நத்தையை எடுத்து கொண்டு செல்கிறார். அங்கு நத்தை கலந்து கொள்ள அனுமதி மறுக்கபடுகிறது.

பின்னர் நிறைய போராட்டங்களுக்கு பின் அனுமதி அளிக்கபடுகிறது. மொத்தம் 200 சுற்றுகளை கொண்ட ரேஸ் போட்டியில் இறுதி சுற்றில் Turbo-விற்கு உடலில் அடிபட்டு தனது சக்தியை இழக்கிறது. இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்றதா? அது உயிர் பிழைத்ததா? என்பதை படம் முழுக்க நகைச்சுவையுடனும், செண்டிமெண்ட் கலந்து கொடுத்துள்ளனர்.

பல படங்களில் பல விலங்குகள் முதன்மையாக காட்டப்பட்டுள்ளன. இந்த படத்தில் நத்தையை ரேஸ் போட்டியுடன் சேர்த்து புதிதாக ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் David Soren. படத்தின் உணர்வுகளுக்கேற்ற இசையை கொடுத்து ரசிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் Henry Jackman. David Soren-ன் வலிமையான திரைக்கதையாலும், Chris Stover-ன் அழகான ஒளிப்பதிவாலும் ரசிகர்களை கவர்கிறது Turbo.