பெரியார் பற்றி சீமான் பேசியது சரிதான்: எச். ராஜா ஆதரவு!

சீமானுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் பெரியார் குறித்து உண்மையை பேசிய சீமானுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “திமுகவினர் எல்லாம் பெரியாரின் கூட்டம். தந்தை பெரியார் தேசத்துரோகி, பட்டியல் சமுதாயத்திற்கு எதிரானவர். தமிழ் தேச விரோதி பெண்களுக்கு எதிரான மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பதற்கு ஆதாரம் உள்ளது. சீமானின் பல கருத்துகள் குறித்து எனக்கு உடன்பாடு கிடையாது. பெரியார் குறித்து சீமான் கூறிய கருத்திற்காக கல்லை கொண்டு அடிப்பீர்களா? வெள்ளையன் வெளியேறினால் விஞ்ஞானம் வெளியேறிவிடும் என்று காந்தியடிகளுக்கு எதிராக தீர்மானம் போட்ட திகவினர் தேசவிரோதிகள். தமிழ் மொழியை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வாழ்ந்து மறைந்தவர் பெரியார். இந்தியா சுதந்திரம் பெற்றதை துக்க நாள் என்று கூறியவர் பெரியார். ஈவேரா தினந்தோறும் விலைமாதர் வீடு புகுந்து வருவார், நண்பர்களோடு விலைமாதர் வீட்டிற்கு செல்வார்.

காவிரி ஆற்றங்கரையில் விலைமாதரோடும் நண்பர்களோடும் கூத்தடிப்பார் என்று நான் சொல்லவில்லை, சாமி சிதம்பரனார் எழுதிய பெரியார் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பொதுவெளியில் சாப்பிடுவதும், உடலுறவு கொள்வதும் விலங்குகள் செய்யும் வேலை. விலைமாதர்களோடு கூத்தடிப்பதற்காக மனைவி நாகம்மையை சமைத்து அனுப்ப சொல்லுவது, பெண் அடிமைத்தனமா? பெண் விடுதலையா? என்று பகுத்தறிவு உள்ளவர்கள் யோசியுங்கள். தமிழ் பிராமணர்கள் ஆயிரம் பேரை கொல்ல வேண்டும் என்று பேசியுள்ள பெரியாரை பைத்தியக்கார மருத்துவமனையில் சேர்த்து பைத்தியம் தெளிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. 1957 ஆம் ஆண்டு காமராஜருக்கு எழுதிய கடிதத்தில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார்.

ஈவேரா திக கூட்ட தீர்மானங்களை வெளியிட்ட பத்திரிக்கை மீது தாக்குதல் நடத்தியவர்கள் திகவினர். இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை துக்கநாள் என்று கூறினார். அவரை தேசதுரோகி என்று கூறாமல் என்ன செய்ய முடியும்?. வெள்ளைக்காரர்களின் கைக்கூலியாக இருந்துகொண்டு பேசுகிறார்கள். சீமான் பேசியது அத்தனையும் உண்மை. பெரியாரை பற்றி சீமான பேசியதை விட பேரறிஞர் அண்ணா பெரியாரை மோசமாக பேசியுள்ளார். கன்னிமரா நூலகம் சில ஆண்டுகளுக்குமுன் எரிக்கப்பட்டது. கருணாநிதி முதல்வராக வந்தபிறகு பெரியாரின் உண்மைகளை மறைப்பதற்காக பத்திரிக்கைகளில் வெளிவந்ததை அழிக்கிறதுக்காக நடந்தது என்று சொல்கிறார்கள். ஈவேரா என்பது வெங்காயம்தான். வெங்காயத்தை ஒவ்வொருதோழாக உரித்தால் ஒன்றும் இருக்காது. ஆதாரத்தை கொடு என்று கேட்கிறார்கள், ஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் குறித்து ஜவர்ஹலால் நேரு கூறிய பக்கத்தையே கிழித்தள்ளனர். இது என்னோட வார்த்தை இல்லை, பெரியாரின் வார்ததை. திமுகவினர் தேர்தலில் ஓட்டு வேண்டும் என்றால் வீட்டு பெண்களை விட்டுவிடுவார்கள் என்று பெரியார் சொல்லியுள்ளார். நடிகர் சத்தியராஜ் திக பேசுவார், பெரியார் படத்தில் நடிப்பார். மகனுக்கு கல்யாணம் சனாதான முறைப்படி கோவிலில் நடத்துவார். வெட்கமாக இல்லையா சத்தியராஜ் ஒரு மோசடி பேர்வழி” என்றார்.