தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் ட்ரோபி லான்ச்

கோலாகலமாக நடந்த ‘தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலி’ன் ட்ரோபி லான்ச்.

தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் ட்ரோபி லான்ச் ஈவென்ட் பிப்ரவரி 15 புதன்கிழமை அன்று லே மாஜிக் பிரேம்ஸ்ல் கோலாகலமாக நடந்தது. ஒளிப்பதிவாளர் திரு. P.C. ஸ்ரீஈரம் அவர்களால் செய்யப்பட்டது. அதில் திரைத்துறையை சேர்ந்த ஜாம்பவான்கள் ஒளிப்பதிவாளர் திரு. P.C.ஸ்ரீராம், இசையமைப்பாளர் திரு. வித்யா சாகர், படத்தொகுப்பாளர் திரு. B.லெனின், இயக்குனர் திரு. V.சேகர், மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

அப்போது (இடமிருந்து வலம்) படத்துகுப்பாளர் திரு லெனின், இசையமைப்பாளர் திரு. வித்யாசாகர், மரியாதைக்குரிய ஜூரி. திரு கலைமாமணி நெல்லை சுந்தரராஜன், இயக்குனர் திரு V. சேகர், அதன் நிறுவனர்கள் திரு சபரிநாதன் முத்துபாண்டியன், திரு. MM தனா, ராஜேஷ் கண்ணா, ராகுல் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சர்வதேச திரைப்பட விழா என்பது சினிமாவைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு, ஒரு சில திரைத்துறையினருக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே எளிதில் தெரிவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் இருக்கிறது. அதைமாற்றி சினிமாவை விரும்பும் கடைக்கோடி மாணவர்களுக்கும், சினிமா விரும்பிகளுக்கும், கனவுகளோடு பயனிமமும் உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள், மற்றும் திரைத்துறையினர்களுக்கும் எளிதில் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த தி கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா உருவாக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 153 நாடுகளில் இருந்து படைப்புகள் சமர்ப்பிக்கப்படுகிறது. கலைத்துறையை பயிற்றுவிக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் மாணவர்களுக்கும் தேடிச்சென்று அவர்களை இதில் பங்கேற்க வைக்கும் நோக்கத்தில் Prof. Dhanapalan College of Science and Management, Chennai மற்றும் AVS College of Arts And Science, Salem உதவியோடு அணைத்து கல்லூரியையும் பங்கேற்க வைக்கவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

திரைப்படம், ஆவணப்படம், திரைக்கதை தொகுப்பு, மொபைல் திரைப்படங்கள், குறும்படங்கள் என்று மொத்தம் 41 பிரிவுகளில் உங்கள் படைப்புகளை Filmfreeway மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய கடைசி தேதி ஏப்ரல் 4. திரைப்பட திரையிடல் மற்றும் விருது விழா ஏப்ரல் 20 தேதியில் நடைபெற இருக்கிறது.

இந்த விழா விமர்சையாக நடந்ததற்கு கலைமாமணி நெல்லை சுந்தராஜன் அவர்களுக்கும் Vee Entertainment விஜி ஆன்டனிக்கும் நன்றி தெரிவித்ததுடன், இந்திய திரைப்படங்கள் உலக திரைப்பட விருதுகளை நோக்கி படையெடுப்பதைப்போல், உலக திரைப்படங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்கள் திரைப்பட விழாவில் பங்கேற்க வைப்பதை கௌரவமாக கருதவைப்பதே தங்கள் நோக்கம் என்று அதன் நிறுவனர்கள் MM தனா, ராஜேஷ் கண்ணா, ராகுல் ராஜேந்திரன் கூறுகின்றனர்.

Leave a Response