பிரச்சாரத்தின் போது அமைச்சர் ஜெயக்குமாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பெண்!

ராயபுரம் தொகுதியில் ஏழாவது முறையாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலை சந்திக்கிறார்.
ஏற்கனவே நடந்து முடிந்த ஆறு தேர்தலில் ஐந்து முறை அதே தொகுதியில் வெற்றி பெற்று மக்களின் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் காலை தொடங்கி இரவு வரையிலும் வீதி தோறும், வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று பஜனை தெருவில் அவர் பிரச்சாரத்திற்காக வந்தபோது உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெண்மணி அவர் அருகே வந்து கையை பிடித்து, “எங்க தெய்வம் நீதானய்யா நீதானய்யா கொரோனா காலத்துல எல்லா உதவியும் செஞ்சு எங்கள காப்பாத்துன தெய்வம் நீ தான நீ ஜெயிக்கணும்ய்யா” என்று சொல்லி ஜெயக்குமாரின் கைகளை பற்றிக் கொண்டார்.

அங்கிருந்த அனைவரும் இந்த காட்சியை பார்த்து உறைந்து போனார்கள். அத்தோடு நிறுத்திக் கொள்ளாத அந்தப் பெண்மணி அருகில் இருந்த மாதா சிலையை தொட்டு வணங்கி வந்து ஜெயக்குமாரின் கன்னத்தை தடவி “இந்த தாயோட முத்தம்” இது என்று சொல்லி இரு கன்னத்திலும் முத்தமிட்டார். “நீ இந்த இந்த மண்ணின் மைந்தன் ஜெயிக்கணும்” என்று சத்தமாக சொன்னார். உடனே அமைச்சர் “சரிம்மா சரிம்மா உங்க எல்லாரையும் நான் பத்திரமா பார்த்துக்கிறேன்” என்று ஜெயக்குமார் உருக்கமான குரலில் சொன்னபோது, அந்த இடம் சற்று நேரம் அமைதியாக இருந்தது.

தொகுதியிலுள்ள அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு தொகுதியை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஜெயக்குமார். சாதி, மதம், கட்சி என எந்த வேறுபாடும் பார்க்காமல் தொகுதி மக்கள் யார் எந்த உதவி கேட்டாலும் செய்து கொடுப்பதால் அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. அந்த செல்வாக்கு தேர்தலில் வாக்காக மாறுவதால் ராயபுரம் தொகுதியில் தொடர் வெற்றிகளை அவரால் பெற முடிகிறது.

எவ்வளவு பெரிய விஐபியாக இருந்தாலும் பல நேரங்களில் வெற்றி வாய்ப்புக்காக தொகுதியை மாற்றிக் கொண்டு செல்வதுண்டு. ஆனால் ஜெயகுமார் மட்டும்தான் அதே தொகுதியில் தொடர்ந்து பயணிக்கிறார். எனவே அவரது வெற்றி வாய்ப்பு இந்த முறையும் சந்தேகம் இல்லாமல் உறுதியாகி இருப்பதாகவே அனைவரும் சொல்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்பதை மே 2ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Response