8 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டிய துல்கர் படத்தின் ஸ்னீக் பீக்

துல்கர் சல்மான் நடிக்கும் “குருப்” என்னும் மலையாள படத்தின் ஸ்னீக் பீக், துல்கர் சல்மான் பிறந்தநாளான நேற்று வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஒரு நாளுக்குள் 8 லட்சத்திற்கும் மேலாக பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

“குருப்” என்னும் மலையாள படத்தை ‘WayFarer Films & M-Star Entertainments’ இணைந்து தயாரித்துள்ளது. ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கவுள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுஷின் ஷியாம் இசையமைக்க விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பினை செய்துள்ளார்.

இந்த ஸ்னீக் பீக்கில் துல்கர் சல்மானின் தோற்றம் சற்று வித்யாசமாக உள்ளது. படம் ஏதாவது ஒரு பீரியட் பில்ம் போல தோற்றமளிக்கிறது. ஸ்னீக் பீக் பார்க்கும்போது முழு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுவது போல் உள்ளது. ஸ்னீக் பீக் வெளியான ஒரு நாளிலேயே 8 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“குருப்” மலையாள படத்தின் ஸ்னீக் பீக் யை பார்க்க கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.

https://youtu.be/EreOwfYzRsQ

Leave a Response