இந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..

லடாக் எல்லையில் கடந்த பல வாரங்களாக இந்தியா – சீனா இடையே பதட்டம் நீடித்து வந்த நிலையில்
இன்று இந்தியா – சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் குவிக்கப்பட்டிருந்த இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

சீன ராணுவத்துடனான மோதலின் போது துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாகவும், இந்த தாக்குதலில் இந்திய ராணுவ உயர் அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். உடனடியாக ராணுவ உயர் அதிகாரிகள் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி நிலையை சுமூகமாக்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Response