அக்காகுருவி படத்திற்காக பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கும் இசைஞானி

‘மதுரை முத்து மூவிஸ்’ மற்றும் ‘கனவு தொழிற்சாலை’ இணைந்து தயாரித்துவரும் படம் “அக்காகுருவி”. சாமி டைரக்ட் செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரீ-ரெகார்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. உலகத்தரவரிசையில் இப்படத்துக்கு ரீ-ரெகார்டிங் செய்து வருகிறார் இளையராஜா. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். உலகப்புகழ் பெற்ற திரைப்படமான “சில்ட்ரன் ஆஃப் ஹெவன்” படத்தின் மறுபதிப்பான “அக்கா குருவி”யை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கியுள்ளார். படத்தை பார்த்த பின் தான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் இளையராஜா.

இரண்டு குழந்தைகள், அப்பா அம்மா இவர்களுடைய உணர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். இந்த காட்சிகளுக்கு பின்னணி இசையில் பல உணர்ச்சிகரமான இடங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அது அமையும். மொத்தம் 11 பாடல்கள் உபயோகப்படுத்தியுள்ளனர்.

குழந்தைகளின் கோடை கொண்டாட்டமாக மே மாதம் இப்படத்தை திரைக்குகொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.

இப்படத்தின் கதையை மஜித் மஜிதி எழுதியிருக்கிறார். பாடல்கள் எழுதி இசையமைத்திருப்பவர் இளையராஜா.

இளையராஜா பாட்டு எழுதி இசையமைத்த “அக்கா குருவி”. சாமி இயக்கத்தில் உலகத்தரப்படம்.

Leave a Response