செக் மோசடி வழக்கில் சிக்கிய பிரபல கல்வி நிறுவனத்தின் வாரிசு…

தமிழகத்தில் செயல்படும் முக்கிய தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்று வேலம்மாள் கல்வி குழுமம். இந்நிறுவனம் எம்.வி.முத்துராமலிங்கம் அவர்களால் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு சென்னை முகப்பேரில் ஒரு கீத்து கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்டது. பின் வரும் காலங்களில் நல்ல வளர்ச்சி அடைந்து இன்று வேலம்மாள் கல்வி குழுமம் பல கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

வேலம்மாள் கல்லூரி மற்றும் பள்ளிகளின் கிளைகள் ஒவ்வொன்றிலும் மாணவர்களுக்கான ஹாஸ்டல் வசதி அமைந்துள்ளது. அது மட்டுமின்றி அந்த கிளைகளில் மாணவர்களுக்கான கேன்டீன் வசதியும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலம்மாள் கல்வி குழுமங்களின் கேன்டீன்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் வெளியாட்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. சென்னை புறநகர் பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் இன்டர்நெஷனால் பள்ளியின் போதி கேம்பஸில் அமைந்துள்ள கேன்டீனை ‘நலம் நட்ஸ் & நட்ஸ்’ நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த ‘நலம் நட்ஸ் & நட்ஸ்’ கேன்டீனை வேலம்மாள் கல்வி குழுமங்கள் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் அவர்களின் இளைய மகன் எம்.வி.எம்.சசிகுமார், சசிகுமார் மனைவி கீதாஞ்சலி சசிகுமார் மற்றும் கே.வி.மோகன்தாஸ் ஆகியோர் கூட்டு நிறுவனமாக இந்த கேன்டீனை நடத்தி வருகின்றனர்.

இந்த ‘நலம் நட்ஸ் & நட்ஸ்’ கேன்டீன் நிர்வாகம் ஆர்.தனவேந்திரன் என்பவருக்கு சொந்தமான ‘குரு என்டர்ப்ரைசஸ்’ நிறுவனத்திலிருந்து 2018 – 2018ம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் ₹1.10 கோடி மதிப்புள்ள மளிகை பொருட்களை ‘வேலம்மாள் போதி கேம்பஸ்’ பள்ளி கேன்டீனுக்காக வாங்கியுள்ளனர். இதில் ஒரு பகுதி பணத்தை செலுத்திவிட்டு சுமார் ₹65 லட்சம் பணத்தை பாக்கி வைத்துள்ளனர். குரு என்டர்ப்ரைசஸ் நிறுவனர் தனவேந்திரன் அந்த கேன்டீன் பங்குதாரர்களை பல முறை முறையிட்டு அவருக்கு சேரவேண்டிய பண பாக்கிய கேட்டுள்ளனர். பல இழுத்தடிப்புக்கு பிறகு ‘நலம் நட்ஸ் & நட்ஸ்’ பங்குதாரரும், வேலம்மாள் கல்வி குழுமத்தின் நிறுவனர் எம்.வி.முத்துராமலிங்கத்தின் மகனுமான எம்.வி.எம்.சசிகுமார் ₹5 லட்சம் தனித்தனி மதிப்புள்ள 12 காசோலைகளையும்(மொத்தம் ₹60 லட்சம்), மற்றொரு பங்குதாரரான கே.வி.மோகன்தாஸ் ₹5 லட்சம் மதிப்புள்ள ஒரு காசோலையையும் கொடுத்துள்ளனர். இந்த காசோலைகளை அனைத்தும் வங்கியில் பணமின்றி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

காசோலைகள் வங்கி கணக்கில் பணமின்றி திருப்பியதால், ‘குரு என்டர்ப்ரைசஸ்’ நிறுவனர் ஆர்.தனவேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். செக் மோசடி புகார் வழக்கு மனுவை பெற்ற சென்னை பெருநகர பாஸ்ட் டிராக் நீதிமன்றம், ‘நலம் நட்ஸ் & நட்ஸ்’ பங்குதாரர்களான எம்.வி.எம்.சசிகுமார், கீதாஞ்சலி சசிகுமார் மற்றும் கே.வி.மோகன்தாஸ் ஆகியோர் மார்ச் 31, 2020 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சமன் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் பிரபலமான வேலம்மாள் கல்வி குழும நிறுவனரின் மகன் செக் மோசடி செய்துள்ளார் என்ற செய்தி தற்போது பரவியுள்ளது. தன் காரணமாக, அந்த நிறுவனத்திற்கு பொருட்களை சப்ளை செய்பவர்கள் தற்போது உஷாராகி அவர்கள் சப்ளை செய்துள்ள பொருட்களுக்கு பண பாக்கியை செட்டில் செய்யும்படி கேட்டு வருவதாக தகவல்கள் சொல்கின்றன.

நீதிமன்றம் வரை சென்றுள்ள இந்த செக் மோசடி புகார், தற்போது வேலம்மாள் கல்வி குழுமத்தின் நற்பெயரை சற்று கலங்கப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

Leave a Response