மருத்துவ கழிவின் பாதிப்பை சொல்லும் ‘கல்தா’

தமிழகத்தில் சில வருடங்களாக தொடரும் அவளை, வெளி மாநில மருத்துவ கழிவுகளை கிராமப்புறங்களில் கொட்டி வருவது தான்! வெளி மாநிலங்களின் மருத்துவ கழிவு எண்பத்தி விட நம் சொந்த மாநிலத்தின் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளை கிராமப்புறங்களில் கொட்டி வருவது வழக்கமாகிவிட்டது. இந்த மருத்துவ கழிவுகளினால், பல வகையான நோய்கள் பரவி வருகின்றன. அத்தகைய நோய்களினால் பெரும்பாலான சிறுவர்கள், கர்பிணி பெண்கள் மாற்று மோது மக்கள் நோய்வாய்ப்பட்டு பாதிப்புக்குள் ஆகியுள்ளார். இதை பற்றி மையமாக வைத்தது ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

‘கல்தா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இத்திரைப்படம் மருத்துவ கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆண்டனி(மேற்கு தொடர்ச்சி மலை) கதாநாயகனாகவும், அய்ரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சிவ நிஷாந்த் மற்றொரு கதாநாயகனாகவும், திவ்யா மற்றுமொரு கதாநாயகியாகவும் நடித்துள்ளானார். இவர்களுடன் அப்புக்குட்டி, கஜராஜ், ராஜசிம்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு சமூக சிந்தனை கொண்ட திரைப்படமாக உருவாகி வரும் இந்த ‘கல்தா’ திரைப்படத்தை செ.ஹரி உத்ரா இயக்கியுள்ளார். ஹரி உத்ரா இதற்க்கு முன்பு ‘தெரு நாய்கள்’ மற்றும் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ ம்திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பாடல்களை வைரமுத்துவும், வித்யாசாகரும் எழுத, தேவா, செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி, கார்த்திக் மற்றும் பலர் பாடல்களை பாட, K .ஜெய் கிரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை B .வாசு மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பினை செய்துள்ளார்.

பத்திரிகையாளர்களை சந்தித்த இப்படத்தின் இயக்குநர் செ. ஹரி உத்ரா பேசும்போது, இப்படம் ஒரு சமூக சிந்தனை கொண்ட படமாக இருக்கும் என்றார். இப்படம் சமூக சிந்தனை கொண்ட படமாக இருந்தாலுயம், இப்படத்தில் நடனத்துடன் கொண்ட பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் அடங்கிய ஒரு முழுநீள திரைப்படமாக இருக்கும் என்றார். இப்படத்தில் எவ்வித ஆபாச காட்சிகளோ அல்லது அருவருக்கத்தக்க காட்சிகளோ இருக்காது என்றும் இப்படத்தினை குடும்பத்தோடு திரையரங்கைள பார்க்கக்கூடிய திரைப்படமாக தான் இருக்கும் என்றார்.

‘கல்தா’ திரைப்படத்தின் முழுவதுமாக முடிவுற்று தணிக்கை செய்யப்படுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படம் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Response