தமிழ் படத்தில் பாடகரான ஈழத்து தமிழன்

ஒரு கமர்சியல் படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிக முக்கியம். அதேபோல் ஒரு பாடலின் வெற்றிக்கு பாடகர்களின் குரல் மிக முக்கியம். சமீபத்தில் வெளியான “அடுத்தசாட்டை” படத்தில் இருபாடல்கள் குரலுக்காகவே பெரிதாக கவனிக்கப்பட்டது. அந்தக்குரல் சத்யன் இளங்கோவின் குரல். ஈழத்தை பூர்வீகமாக கொண்ட சத்யன் இளங்கோ “அடுத்தசாட்டை” படம் மூலமாக தனிப்பெரும் கவனம் பெற்ற பாடகராக உருவெடுத்துள்ளார்.
“கரிகாடு தானே பேரழகு”, “அவன் வருவான் என இருந்தேன்” என்ற இரு பாடல்களும் சத்யன் இளங்கோ குரல் கொண்ட பாடல்கள். பிரபு திலக் தயாரிப்பில், சமுத்திரக்கனி நடித்து, அன்பழகன் இயக்கிய “அடுத்தசாட்டை” படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்து இருந்தார். ஒரு பாடகரின் குரலுக்கு இசை அமைப்பாளர் மகுடம் சூட்டும் போது அப்பாடகர் மேல் ஒட்டுமொத்த வெளிச்சமும் பதிவாகும். அப்படி ஒரு வெளிச்சம் கிடைத்த சத்யன் இளங்கோ ஒரு பாடகராக மட்டும் அல்லாமல், ஒரு நடிகராகவும் பரிணாமம் பெற்றவர். 2012-ல் ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ் திரைப்படமான “இனியவளே காத்திருப்பேன்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்படத்தை அவரது தந்தையான ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார். Ravi & Jane, Thousand sons என்ற இரண்டு ஆஸ்திரேலிய குறும்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இனி சத்யன் இளங்கோ தமிழ்சினிமாவில் பாடகராகவும், நடிகராகவும் அடுத்தடுத்த உயரங்களை தொட இருக்கிறார்.

Leave a Response