சூர்யா பட வில்லனிடம் பயிற்சி பெரும் அருண் விஜய்..!

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தடம்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது பிரபாசுடன் ‘சாஹோ’ என்ற படத்திலும் விஜய் ஆண்டனியுடன் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்திலும் நடித்து வரும் அருண் விஜய் அடுத்து விவேக் இயக்கத்தில் ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்கிறார். பாக்சிங்கை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் நடிப்பதற்காக அருண் விஜய் தயாராகி வருகிறார். இதற்காக வியட்நாம் சென்று பாக்சிங் பயிற்சி பெற்று வரும் விஜய் அங்கு சூர்யாவின் ‘7-ஆம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானியிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.

அருண் விஜய் ஜானியுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ‘வியட்நாமில் ஜானி மாஸ்டருடன் பயிற்சி எடுத்து வருகிறேன்’ என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் இந்த படம் அதிரடி பாக்சிங் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைய படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் ஒப்பந்தமாகியுள்ளார். டி.இமான் இசை அமைக்கும் இந்த படத்தின் சண்டை காட்சிகளை பீட்டர் ஹெயின் அமைக்கிறார். மார்கஸ் ஒளிப்பதிவு செய்கிரார். மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

Leave a Response