நாயகியின் அழுகைக்கு யார் காரணம்?

Ponmaalai Pozhudhu Press Meet

கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகும் படம் பொன்மாலை பொழுது. கடந்த ஆண்டே வெளியீட்டுக்கு தயாரான இந்த படம், திரையை தொட மட்டும் பெரும் போராட்டத்தை சந்தித்து பெட்டிக்குள்ளே முடங்கி கிடந்தது. பின்னர் இதனை வெளியிட ராம் ப்ரொடக்ஷன்ஸ் வி.ராமதாஸ் முன்வந்து வாங்கி வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இந்த சந்திப்பில் படத்தின் இயக்குனர் ஏ.சி.,துரை, நாயகன் ஆதவ், நாயகி காயத்ரி, தயாரிப்பாளர் ராமதாஸ், சத்யலட்சுமி, அம்ரிதா கவரி, இசையமைப்பாளர் சி.சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நீண்ட நாட்களாக வெளிவாராத தனது முதல் படம் திரைக்கு வரும் மகிழ்ச்சியில் பேச முடியாத நாயகி காயத்ரி சற்றே கண்கலங்கி விட்டார். மேலும் விழாவில் பேசியவர்கள் நடிகர் அருள்தாஸ் நாயகியை அடிப்பது போன்ற ஒரு காட்சியில் உண்மையாகவே அடித்துவிட நாயகி அழுது கொண்டே சென்று விட்டார் என்று கூற, இது குறித்து இயக்குனரிடம் நிருபர்கள் கேட்டனர்.

நாயகி அழுததற்கு நாயகனை விட்டு பிரிவது காரணமா அல்லது அருள்தாஸ் அடித்தது காரணமா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு இயக்குனர் துரை, “ஒரு வருடத்திற்கு முன் அடித்தது இப்போதும் வலிப்பதற்கு வாய்ப்பில்லை, அதனால் நீங்கள் நாயகனை தான் கேட்கவேண்டும்” என்றார்.

அதற்கு பதிலளித்த ஆதவ், “காயத்ரி அழுகைக்கு நான் காரணமில்லை. நானும் படப்பிடிப்பில் நிறைய அடிவாங்கி அழுதிருக்கிறேன், இதற்கெல்லாம் காரணம் இயக்குனர் துரை தான்” என்றார்.