நாயுடன் நடிக்க 10 நாட்கள் பயிற்சி எடுத்த நடிகர்!

71

தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக இளையதேவன் எழுதி இயக்கி தயாரிக்கும் படம் “ஞானகிறுக்கன்”. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் டேனியல் பாலாஜி நடிக்க கதாநாயகனாக ஜெகா கதாநாயகியாக அர்ச்சனா கவி சுஸ்மிதா நடிக்க மற்றும் செந்தீ, தம்பி ராமய்யா, செவ்வாழை ராஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.

அறிவுமதி, நா.முத்துக்குமார், யுகபாரதி, கபிலன், மோகன்ராஜன் பாடல்களுக்கு தாஜ்நு]ர் இசையமைக்கிறார். ஓளிப்பதிவு் செல்வகுமார், எடிட்டிங் ராஜா முகம்மது. எழுதி இயக்கி தயாரிக்கிறார் இளையதேவன்.

இது எப்படிப்பட்ட படம் என்று இளையதேவனிடம் கேட்டோம்.; தற்போதைய தமிழ் சினிமாவில் படங்களில் யதார்த்தம் எப்படி முன்னெடுத்து செல்லப்படுகிறதோ அதற்கு ஈடு செய்யும் வகையில் படம் இருக்கும். இந்திய சினிமாவில் சத்யஜித்ரேவின் படங்கள் எத்தகைய பெருமைகளை அள்ளிகொடுத்ததோ அதே போன்ற பெருமைகளை தமிழ் சினிமாவுக்கு ஞானகிறுக்கன் கொடுப்பான்.  புதுமையை என்றும் வரவேற்கும் ரசிகர்களின் ரசனையின் மீது நம்பிக்கை கொண்டு கூறுகிறேன் என்றார் இளைய தேவன். நல்ல தரமான படைப்பை கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அதனாலேயே இந்த பரீட்சார்ந்த முயற்சியை நானே தயாரித்து இயக்குகிறேன்.

கோடம்பாக்கம், எழும்பூர், சென்டரல் என பரபரப்பாக இயங்கும் முக்கிய சாலையோர பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்களோடு மக்களாக நாயகன் ஜெகாவும் நாயகி அர்ச்சனா கவியும் அவர்களுடன் வாழ்ந்து பழகி “யாரை நம்பி நாம் வந்தது” என்ற மதுபால கிருஷ்ணன் பாடலுக்கு நடித்தனர். படப்பிடிப்பு முடிந்த கடைசி நாள் அந்த மக்கள் இருவரையும் கட்டித்தழுவி எங்களின் எதிர்காலத்துக்கு நம்பிக்கையூட்டுவதாக இநதப் பாடல் இருக்கிறது.  பாடல் அமோக வெற்றி பெறும் என்று வாழ்த்தினர். அது எங்களுக்கு உற்சாகம் தந்தது.

ஓரு காட்சியில் ஜெகா திருச்சியிலிருந்து பொங்கல் திருவிழாவுக்காக கும்பகோணம் வருகிறான். கும்பகோணத்தில் வந்து கரும்பு வாங்கி காரில் வைத்துக் கொண்டு ஊருக்குச் செல்ல வேண்டும். கும்பகோணத்து நகர வீதிகள், மகாகுளம் முதலியவை பொங்கலுக்கு முதல் நாள் இரவு ஒளி வெள்ளத்தில் எப்படி பிரகாசமாக இருக்கும் என்பதை காட்ட 5 காமிராக்கள் கொண்டு ஒரே நாளில் படமானது. ஞானகிறுக்கனில் மிகச்சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று.

கும்பகோணம், திருச்சி, சென்னை, புதுக்கோட்டை, காரைக்குடி என பல்வேறு இடங்களில் 75 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. ஓரு குழந்தை பிறந்தது முதல் அக்குழந்தை வளர்ந்து வாலிபன் அகும் வரை அவன் கடந்து வந்த வாழ்க்கையில் நிகழ்வுகளை சம்பவங்களை சினிமாவுக்காக சமரசம் செய்து கொள்ளாமல் நடந்தது நடந்தபடியே எதார்த்ததை சற்றும் மீறாமல் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நாயகன் ஜெகாவுக்கு தந்தையாக நடித்துள்ள டேனியல் பாலாஜி கதைப்படி “வைரவன்” என்ற பெயருடைய நாயுடன் நடிக்க வேண்டியிருந்தது. அதற்காக நாய் வரவழைக்கப்பட்டு நாயுடன் நெருங்கி பழகி 10 நாட்கள் பயிற்சி எடுத்து கொண்டார். அதன்பின்னர் கதையின் காட்சிபடி தத்ரூபமாக படமாக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் படத்தில் ஓரு காட்சியில் ஆறு பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை ஓரே டேக்கில் பேசி நடித்து படப்படிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களும் படப்பிடிப்பு குழுவினரும் கைத்தட்டி பாராட்டினர். இந்த காட்சியை படத்தில் பார்க்கும்போது நிச்சயம் டேனியலை பாராட்டதவர்கள் இருக்க முடியாது.

மேலும் இப்படத்தி[ல் டேனியல் பாலாஜி ஞானகிறுக்கனாக நடித்துள்ளார். “புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா” என்ற பழமொழிக்கு ஏற்ப நாயகன் ஜெகாவும் ஞானகிறுக்கனாக மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஊருக்கு மட்டுமே ஞானகிறுக்கனாக டேனியல் நடிக்க, நாயகன் ஜெகாவோ மனிதர்களுக்கே ஞானகிறுக்கனாக படத்தில் நடித்துள்ளார் என்றார் இயக்குனர்.