மக்கள் சேவைக்காக மட்டுமே அரசியல் பண்ண வரும் “சேர்மன்”!

DSC08644

அரசியல்  என்பது மக்களுக்காக சேவை செய்வதற்காக கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாக  கருத வேண்டும். ஆனால் அது இன்று வியாபார பொருளாக மாறியுள்ளது. இது மாற வேண்டும். மக்கள் சேவைக்காக மட்டுமே அரசியல் பயன்பட வேண்டும். இந்த உன்னத கருத்தை மையமாக வைத்து உருவாகிறது “சேர்மன்”.

அம்மா பிக்சர்ஸ் சார்பில் ராஜதானி டாக்டர் பிஜு ரமேஷ் சமுக சிந்தனையுள்ள காதல் கலந்த படமாக சேர்மன் படத்தினை உருவாகியுள்ளார். காதல், சென்டிமென்ட், சண்டை என அனைத்தும் கலந்த ஒரு கமர்சியல் படமாக வளர்ந்து வருகிறது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் திருவனந்தபுரம், ஆலப்புழா, கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று  வருகிறது. இன்றைய  அரசியல் களத்தை அப்படியே திரைப்படத்தில் காணலாம் என்கிறார் படத்தின் இயக்குனர்  பவன்  பன்னீர் செல்வம்.

சேர்மன்  படத்தின் வித்தியாசமான கதைநாயகனாக அறிமுகமாகிறார் டாக்டர் SBS பஷீர். நாயகிகளாக அனுஷா, தஞ்சனா, சுவேகா அறிமுகமாகின்றனர். துபாய் மாகின் வில்லனாக அறிமுகமாகின்றார், ஒளிப்பதிவு தினேஷ், நடனம் ராம்  முருகேஷ், இசை  ஜூடு தேடன்ஸ்,  கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்குகிறார் பவன் பன்னீர்  செல்வம்.