மு.க அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி அதிரடி சஸ்பெண்ட்..!

மு.க அழகிரியை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற திமுக நிர்வாகி ஒருவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவிற்கு பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி மீண்டும் திமுகவில் இணைவாரா என பல கேள்விகள் எழுந்தது. ஆனால் இதற்கு திமுக கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் ஸ்டாலினும் இது குறித்து எத்தகைய தகவலும் அளிக்கவில்லை.

இதற்கிடையில் திமுகவின் புதிய தலைவராக மு.க ஸ்டாலின் எத்தகைய போட்டியுமின்றி நேரடியாக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முக அழகிரி,வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும் நான் கருணாநிதியின் மகன் சொன்னதை செய்வேன் என்றும் கூறிவருகிறார்.

இந்த நிலையில் சென்னை வந்த முக அழகிரியை சென்னை விமான நிலையத்தில் திமுக நிர்வாகி ரவி வரவேற்றுள்ளார்.இதனால் இவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ரவி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு உள்ளார்,எனவே அவரை தற்காலிகமாக பணி நீக்குவதாக தெரிவித்துள்ளார்.

இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response