தமிழில் வருகிறது எம்.எஸ்.ஆஃபீஸ் : அமைச்சர் செங்கோட்டையன்..!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை குறை கூறும் பலர் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை மற்றும் குறை கூறுவதில்லை. அவர் தன்னுடைய துறையில் புதிய, ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டு வருவதே இதற்கு காரணம் புதிய பாடத்திட்டம் முதல் புதிய யூனிபார்ம் வரை அவருடைய திட்டங்கள் அனைத்திற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ்.ஆபீஸ் என்ற சாப்ட்வேரை தமிழில் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மிக விரைவில் அவர்களிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.ஆஃபிஸில் உள்ள எக்ஸெல், வேர்ட், பவர்பாயிண்டு உள்பட அனைத்துமே விரைவில் தமிழில் மாணவர்களுக்கு வரும் வகையில் அரசு எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தாய் மொழியில் படிக்கும் சுகமே தனிதான். இனிவரும் தலைமுறைகளுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பது நமது கடமை.

Leave a Response