ரூ.134 கோடி ரூபாய் செலவில் 515 புதிய குளிர்சாதன பேருந்துகள் துவக்கம்..!

தமிழ்நாட்டில் முதன் முறையாக பயோடாய்லெட் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய நவீன பேருந்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொடி அசைத்து துவக்கி வைத்தார். ரூ.134 கோடி ரூபாய் செலவில் 515 புதிய குளிர்சாதன பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தன.

பச்சைநிற வண்ணத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்து தற்போது, வெள்ளை, நீலம், சாம்பல் நிறங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தொலைதூர பேருந்துகள் வெள்ளை நிறத்திலும் மற்ற பேருந்துகள் நீலம், சாம்பல் நிறங்களிலும் உள்ளன.

சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் இந்தபுதிய பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன.அது மட்டுமல்லாமல், தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஏசி மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு இன்று முதல் வந்துள்ளன.

புதிய பேருந்தினுள் கழிப்பறை, படுக்கை, ஏசி, சென்சாருடன் கூடிய தானியங்கி கதவுகள், தானியங்கி படிக்கட்டுகள், மாற்று திறனாளிகளுக்கு தாழ்தள படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Response