காவிரி விவகாரம் : கர்நாடகாவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று, சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்த விவாதம் நடைபெற்றபோது திமுக சார்பில் எதிர்க்கட்சி துணை தலைவர், துரைமுருகன் எழுந்து, கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசும், காவிரி தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக பிரதிநிதிகளை அழைத்து பேசி எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளேன். நமது மூத்த வழக்கறிஞர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

காவிரி ஆணையம் எவ்வாறு செயல்படப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்போம். அதை பொறுத்து, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டலாமா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்யலாம்.

காவிரி தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு 15 ஆண்டுகள் வரை பொருந்தும். சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இன்றைய கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளும் பேசி தீர்க்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Leave a Response