காவிரி ஆணையம்: கர்நாடகா உறுப்பினர்கள் நியமனம்-குமாரசாமி அறிவிப்பு..!

காவிரி காவிரி ஆணையத்திற்கான கர்நாடக மாநில உறுப்பினர்களை நியமனம் செய்து அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றி காவிரி வாரியம் அமைப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு தமிழகத்திற்கு இதில் போக்கு காட்டிக்கொண்டே இருந்தது. காவிரி வாரிய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும் கூட, கர்நாடக அதன் உறுப்பினர்களை அறிவிக்காமல் இருந்தது.

இதனால் இன்னும் வாரியம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் கர்நாடக அதுவாக திறந்துவிடும் தண்ணீர் மட்டுமே நமக்கு வந்தது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் காவிரி பிரச்சனை குறித்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவுக்கு 2 கர்நாடகா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். காவிரி ஆணையத்தின் கர்நாடக பிரதிநிதியாக ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி ஒழுங்காற்று குழுவின் கர்நாடக பிரதிநிதியான பிரசன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த காவிரி பிரச்சனை குறித்து பேச கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்ட உள்ளது.

Leave a Response