ஆபத்து வந்தால் தாய்மொழியில் கத்துவது என்பது இதுதானா ?: ரஜினி குறித்து ராமதாஸ்..!

ஆபத்து வந்தால் தாய்மொழியில் கத்துவார்கள் என்பார்கள்.ஆனால் ரஜினியின் தாய்மொழி எது கன்னடமா ? மராத்தியா ? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காவிரி விவகாரத்தில் ரஜினி தெரிவித்த கருத்துகள் ஏற்கும்படியாக இல்லாததால், காலா திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என்றும், அதற்கு ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கர்நாடக திரைப்பட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, காலா திரைப்படம் எந்த வித பிரச்னையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், கன்னடத்தில் கர்நாடகாவில் திரைப்படத்ததை திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ், காலா படத்தை திரையிட அனுமதி கோரி கர்நாடகத்துக்கு கன்னடத்தில் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆபத்து வந்தால் தாய்மொழியில் தான் கத்துவார்கள் என்பது இதுதானோ? அதுசரி… ரஜினியின் தாய்மொழி கன்னடமா…. மராட்டியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Response