தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 72 போலீஸார் காயமடைந்துள்ளனர்:டிஜிபி அறிக்கை..!

தூத்துக்குடி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, நடைபெற்ற வன்முறையில் 72 போலீஸார் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டவர்கள் மீதும், காவல்துறை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் முன்வைத்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு குறித்து காவல்துறை டிஜிபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், போராட்டம் நடைபெற்ற நாளின் வன்முறையாளர்கள் ஏற்படுத்திய கலவரத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அவர்களை ஒடுக்கவே, துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இந்தப் போராட்டம் தொடர்பாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 177 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கலவரத்தை தூண்டியதாக 14 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 72 போலீஸார் காயமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response