நாளை மறுநாள் தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. நாளை மறுநாள் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தூத்துக்குடி செல்கிறார்.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மே 28 ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதேபோல் மக்கள் நீதி மய்யம்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், நடிகள் ரஜினிகாந்த், நடிகர் விஜய் உள்ளிட்டோர் தூத்துக்குடி சென்று பார்வையிட்டனர்.

ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை தூத்துக்குடி செல்லவில்லை, பாதிக்கபட்டவர்களை பார்க்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தூத்துக்குடி செல்ல உள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response