ஜூலை மாதத்தில் பிரம்மாண்ட ரிலீசுக்காக காத்திருக்கும் ஜீவா-வின் “கீ” ..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஜீவா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். காளிதாஸ் கதை எழுதி இயக்கி உள்ள கீ என்ற மாறுபட்ட படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

ஜீவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ள இந்த படத்தை எஸ்.மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.

விஷால் சந்திரசேகர் என்பவர் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலை மாதத்தில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், டீசர், ட்ரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

மேலும் இந்த படம் ஜீவாவின் கேரியரில் முக்கிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response