மீண்டும் களத்தில் குதிக்கும் சொப்பன சுந்தரி..!

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பணும் பாண்டியா போன்ற படங்களில் கதாநாயகியாக, கிளாமர் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் நடித்தவர் மனிஷா யாதவ். ஆனால் பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்ததுடன், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடி கவர்ச்சி விருந்து படைத்தார். கிளாமர், நடிப்பு என இரண்டு பாத்திரத்துக்கும் நடிக்க தயாரானதையடுத்து இயக்குனர்களின் பார்வை மனிஷா பக்கம் திரும்பியது.

அடுத்து, ‘ஒரு குப்பை கதை’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. டைட்டிலை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தவர் கதையை கேட்டு உருகினார். அதில் நடித்து முடித்தார். ஹீரோவாக நடன இயக்குனர் தினேஷ் நடித்துள்ளார். அஸ்லம் தயாரிக்க காளி ரங்கசாமி இயக்கி உள்ளார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

Leave a Response