தஞ்சை பெரிய கோவிலின் தரைத் தளம் சீரமைப்பு !

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தரை தளத்தில் பழைய செங்கற்களை அகற்றி, புதிய செங்கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில், ராஜராஜ சோழனால், 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கோவில், மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பெரிய கோவிலில், வெகு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், 6 மாதங்களாக, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக, கோவிலின் திருச்சுற்று மண்டபத்தில் உள்ள ஓவியங்கள், சிவலிங்கத்தை பாதுகாக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு சன்னதிக்கும் பெயர் பலகை, கோவில் பூங்காவில் புல்தரை அமைப்பு போன்ற பணிகள் நடைபெற்றன. தற்போது, கோவில் வளாகத்தில், தரைத் தளம் சீரமைக்கும் வகையில், பழைய செங்கற்களை எடுத்து, புதிய செங்கற்கள் பதிக்கும் பணி, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

Leave a Response