திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறைகிறது..!

தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்த்திரையுலகில் நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. டிஜிட்டல் கட்டணம் சம்பந்தமாக நடைபெற்று வந்த இந்த வேலைநிறுத்தம், திரையுலகில் நடந்து வந்த பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டிருக்கிறது. குறிப்பாக, டிக்கெட் கட்டணத்திற்காகவும் புதிய ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் படங்களுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

ஜூன் 1-ந்தேதி முதல் இந்த புதிய டிக்கெட் கட்டணம் நடைமுறைக்கு வருகிறது.அதோடு, சிறிய படங்கள், பெரிய படங்கள் என்கிற பாகுபாடில்லாமல் அனைத்து படங்களும் சென்சார் சான்றிதழ் பெறும் தேதி அடிப்படையில் வெளியாகயிருக்கும் நிலையில், தற்போது சிறிய படங்கள், பெரிய படங்கள் என்கிற அடிப்படையில் டிக்கெட் கட்டணத்தையும் குறைத்து ரசிகர்களை சிறிய படங்களை பார்க்க வைப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளனர்.

Leave a Response