குடும்பத்தோடு அமர்ந்து கதை கேட்கும் “அருவி” நாயகி..

குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும்படம் என்று சொல்வதுண்டு. அந்த படத்தில்கூட காதல், முத்தம், சிறுசிறு சில்மிஷங்கள் இடம்பெறுகிறது. அதுபோன்ற காட்சி கூட ஆபாசமாக அமைந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் குடும்பத்தோடு அமர்ந்து கதைக்கேட்கிறார் ஒரு ஹீரோயின். ‘அருவி’ படத்தில் நடித்தவர் அதிதி பாலன். பல நடிகைகள் நடிக்க மறுத்த எய்ட்ஸ் நோயாளி கதாபாத்திரத்தை அப்படத்தில் துணிச்சலாக ஏற்று நடித்திருந்தார்.

அதற்காக அவருக்கு இன்னும் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. படம் ஹிட்டானதும் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு வந்தது. ‘அருவி’ படத்துக்கு பிறகு நடிக்கப்போவதில்லை என்று சொல்லி அந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தவர் தற்போது புதிய படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

கதை சொல்ல வருவது சீனியர் இயக்குனரோ, ஜூனியர் இயக்குனரோ அல்லது புதுமுக இயக்குனரோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு முதலிலேயே ஒரு கண்டிஷன் போட்டுவிடுகிறார் அதிதி. நீங்கள் சொல்லும் கதையை நான் மட்டும் தனியாக கேட்கமாட்டேன். அப்பா, அம்மா என குடும்பத்தோடு அமர்ந்துதான் கேட்போம் என கூறுகிறார். இதுபற்றி அதிதி கூறும்போது,’

எங்கள் அனைவருக்கும் கதை பிடிக்க வேண்டும். அப்படியொரு நல்ல கதை கிடைக்கும் பட்சத்தில் அதை நழுவவிடமாட்டேன். அடுத்தபடத்தில் நடிக்க அவசரம் இல்லை. அதனால் ஒருசில மாதங்கள் தாமதம் ஆனாலும் நல்ல கதையையே ஒப்புக்கொள்வேன்’ என்றார்.

Leave a Response