பெண்களின் உயிரைப் பறிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் !

லகெங்கிலும் ஆண்டுதோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் உயிரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்  பறிக்கிறது.
99 சதவீதம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற நுண்கிருமியால் உண்டாகிறது.
இந்நிலையில், உலகில் கர்ப்பப்பைவாய் புற்று நோயில்லாத முதல் நாடு என்ற பெயரை ஆஸ்திரேலியா பெறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நோய்க்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 2007-ம் ஆண்டு ஆண், பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டது. அதனால் ஆஸ்திரேலியாவில் இந்நோய் பாதிப்பு கணிசமாகக் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் 18 முதல் 24 வயது வரையிலான ஆஸ்திரேலிய இளம்பெண்கள் மத்தியில் இந்நோயின் விகிதம் 22.7 சதவீதத்தில் இருந்து 1.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்த தடுப்பூசித் திட்டத்துக்கு முன் ஆஸ்திரேலிய இளவயதினரில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்நோய் பாதிப்புக்கு ஆளானது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.
தற்போது, குறிப்பிட்ட தடுப்பூசியினால் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியால், உலகிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோயில்லாத முதல் நாடாகும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு கிடைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆண்டுதோறும் செய்யும் மருத்துவப் பரிசோதனை மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Response