கைச்செலவுக்காகத்தான் “சினிமா”வில் நடிக்க வந்தேன் சொல்கிறார் “ராகுல் ப்ரீத் சிங்”

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழில் நடிகர் கார்த்தி ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து ராகுல் ப்ரீத் சிங் கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்.

தற்போது ராகுல் ப்ரீத் சிங், பல பாலிவுட் படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘‘நான் ஆன்மிக வழியில் செல்ல ஆரம்பித்து உள்ளேன். சிறு வயதில் இருந்தே ஆன்மிக சம்பந்தப்பட்ட புத்தகங்களை விரும்பி படிப்பேன். எல்லோரும் வாழ்க்கையை திட்டமிட்டு நகர்த்துகிறார்கள். நான் எந்த திட்டமும் வைத்துக்கொள்வது இல்லை.

ஆன்மிக சிந்தனை இருப்பதால் நல்ல விஷயங்கள் தானாகவே நடக்கிறது. நடிகையாக வேண்டும் என்று திட்டமிடவில்லை.ஆன்மிக வழியில் செல்லும் எனக்கு பணம் தேவைப்பட்டது. அதனால் என்னுடைய கைச்செலவுக்காகத்தான் சினிமாவில் நடிக்க வந்தேன். ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொண்டதால் தற்போது தொடர்ந்து நடித்து வருகிறேன்’’ என்று தன்னுடைய வெளிப்படையான பதிலை கூறியுள்ளார் ராகுல் ப்ரீத் சிங்.

Leave a Response