ஆற்காடு பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம் !

ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

விழாவை முன்னிட்டு, அன்னபூரணி சமேத கங்கதார ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், திருவலம் சாந்தா சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.

இதையொட்டி, நாள் தோறும் காலை, மாலை சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திரபிரபை, அன்னவாகனம், காமதேனு வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், கண்ணாடிசேவை, குதிரை வாகனங்களில் உற்சவர் ஊர்வலம் நடைபெறுகிறது.

மார்ச் 30-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் ஆன்மிக சொற்பொழிவு, பஜனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கொடியேற்று விழாவில் திருப்பணிக் குழுத் தலைவர் கு.சரவணன், தொழிலதிபர்கள் ஜெ.லட்சுமணன், ஆர்.எஸ் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Response