தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா மோதும் 3வது டெஸ்ட் நாளை கேப்டவுனில் தொடக்கம் !

balloonletter_1475465587-copy-600x270

தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் தொடங்குகிறது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கும்.

Leave a Response