வேற்று கிரகத்தில் உயிருக்கு போராடும் தந்தை, மகன்!!

ஒரு சில படங்கள் எப்போது வெளிவரும் என எதிர்பார்த்து காத்து கொண்டு இருப்போம். அப்படிபட்ட ஒரு படம் தான் “ஆப்டர் எர்த்”. இப்படம் தமிழில் அபாய கிரகம் என்கிற பெயரில் வெளிவருகிறது. வில் ஸ்மித், ஜேடன் ஸ்மித் இருவரும் இப்படத்தில் தந்தையும் மகனாக நடிக்கிறர்கள். கொலம்பியா  பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இந்திய வம்சாவழியை சேர்ந்த மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதை இராணுவ  கமாண்டோ ஆபீசர் வில் ஸ்மித், மகன் ஜேடன் ஸ்மித். அவரிடம் பயிற்சி பெறும் ஜூனியர் ரேஞ்சர்களில்  ஒருவர். ஒரு பயிற்சி விஷயமாக வில் ஸ்மித், ஜேடன் ஸ்மித் உள்ளிட்ட குழு பயணிக்கும் “ஏர் கிராப்ட்”.

விண்வெளியில் விபத்துக்கு உள்ளாகி வேறொரு கிரகத்திற்குள் சென்று விழுந்து விடுகிறது. அதில் இருந்தவர்களில் அப்பாவும், மகனும் மட்டுமே உயிர் பிழைக்கிறார்கள். மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற அந்த பயங்கரமான கிரகத்தில்  விலங்குகள் வடிவத்திலும், இயற்கையின் வடிவத்திலும் பல ஆபத்துகள் மனிதனுக்கு எதிராக பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கின்றன.

அப்படிப்பட்ட அந்த கிரகத்தில் இருந்து வில் ஸ்மித்தும், ஜேடன் ஸ்மித்தும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை மயிர்க்கூச்செறியும் சாகசங்களுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமளன். ஜூன் 7ம் தேதி சோனி பிக்சர்ஸ் இப்படத்தை இந்தியாவில் நான்கு மொழிகளில் வெளியிடுகிறது