விமல் – ஓவியா நடிப்பில் “களவாணி-2”

kalavani-2-vemal_640x480_61504859334

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘களவாணி’.
சற்குணம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விமல் நாயகனாக நடித்திருந்தார். பிக்பாஸ் மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையை புதிய பாதைக்கு திருப்பிய ‘களவாணி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘களவாணி-2’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கே-2′ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திலும் விமல் – ஓவியா இணைந்து நடிக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா காஞ்சனா-3 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்த தற்போது ‘களவாணி-2’ படத்தில் நடித்து வருகிறார்.

சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு என முதல் பாகத்தில் நடித்த பலரும் இந்த படத்திலும் தொடர்வதாக கூறப்படுகிறது. வர்மான்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சற்குணம் இந்த படத்தை இயக்கி, தயாரிக்கிறார். ஜே.ஜெயக்குமார் மற்றும் டி.ஆர்.ரமேஷ் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leave a Response