போக்குவரத்து விதிளை மீறும் வாகனங்களை துரத்தி செல்லக்கூடாது..

traffic-police-1484244004

போக்குவரத்து விதிளை மீறும் வாகனங்களை துரத்தி சென்று பிடிக்கக்கூடாது என சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, தரமணியில் வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டனை சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கண்டித்து, காவல்துறையினர் தாக்கினர். மனம் நொந்த அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த தீக்குளிப்பு சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. விஜயகுமார் உதவி ஆய்வாளர் பதவியில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த அத்துமீறல்கள் மக்களிடையே நம்பிக்கையின்மைய ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்கள் தணிக்கை செய்யக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் துரத்தி சென்று பிடிக்கக்கூடாது என்றும் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். விதிகளை மீறும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் ஆணையர் கூறியுள்ளார்.

Leave a Response