பட்ஜெட்க்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..! மக்கள் எதிர்பார்ப்பு..!

large_diesel-39021

நாடாளுமன்றத்தில் பிப்.1 தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியை குறைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, சொல்லப்போனால் மத்திய அரசு வரியை குறைக்கும் கட்டாயத்தில் மூழ்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். அதுமட்டும் அல்லாமல் எண்ணெய் வள துறையும் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாட்டின் வர்த்தகச் சந்தைக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கும் விதமாகத் தற்போது மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முடிவு செய்துள்ளது. 2018ஆம் ஆண்டில் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது, அதேபோல் 2019ஆம் ஆண்டிலும் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான பிஜேபி அரசு வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்துடன் இதன் மீதான வரியை குறைக்க அதிகளவிலான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 50 சதவீத தொகை வரியாக மட்டுமே மக்கள் செலுத்தி வருகின்றனர். இதுமட்டும் அல்லாமல் தென் ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

Leave a Response