நாட்டின் 69-வது குடியரசு தினம்: தேசியக் கொடியை ஜனாதிபதி ஏற்றினார்..

pm-pres-820

நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் வழக்கமாக, ஏதேனும் ஒரு நாட்டின் தலைவர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். ஆனால், இம்முறை 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள், இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஹுக், மலேசிய பிரதமர் முகம்மது நஜிப் அப்துல் ரசாக், தாய்லாந்து பிரதமர் ஜெனரல் சான் ஓ சா, மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ டடெர்டே, புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல் போல்க்யா வாதாதுலா, லாவோஸ் பிரதமர் தோங்லூன் சிஸோலித் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சென் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதனையடுத்து, வீரர்கள் அணிவகுப்பு மற்றும் கலாச்சார ஊர்திகள் அணிவகுப்பு நடக்க உள்ளது. விழாவில் மத்திய மந்திரிகள், மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் திரளான அளவிலான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் டெல்லியில் மூவர்ண தேசியக் கொடியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றினார்

Leave a Response