கர்நாடகாவில் முழு அடைப்பால் தமிழக பஸ்கள் எல்லையில் நிறுத்தம்.

மகதாயி நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சனையில் பிரதமர் தலையிடக் கோரி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கன்னட சலுவளி வாட்டாள்’ என்ற கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து பந்த்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

கர்நாடகாவில் முழு அடைப்பு காரணமாக தமிழக பேருந்துகள் அனைத்தும் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் ஓசூர் எல்லையில் திருப்பி அனுப்பப்படுகிறது.

banglore strick

அதே போல நீலகிரி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளும், பன்னாரி வழியாக இயக்கப்படும் பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. மாலை 6 மணிக்கு பிறகே தமிழக பஸ்கள் கிளம்ப முடியும். பந்த் காரணமாக தலைநகர் பெங்களூருவில் சாலைகள் வெறிச்சோடியுள்ளன. அரசு, தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. விப்ரோ நிறுவனம் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

Leave a Response