வளங்களுடன் அமைதியும் பெற விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள் : உலக பொருளாதார மாநாட்டில் மோடி பேச்சி..

DUOGpVLU0AAsXQj-320x180

வாழ்வின் முழுப்பலனை அனுபவித்து வளமாகவும் நலமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள் என உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுவிட்சர்லாந்து வந்து சேர்ந்தார். சுவிட்சர்லாந்து வந்த மோடியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார். உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கடந்தமுறை 1997-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்றபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களை எட்டி இருந்தது. தற்போது அது ஆறு மடங்காக உயர்ந்துள்ளது. நமது வாழ்முறையை தொழில்நுட்பம் மாற்றி அமைத்துள்ளது. அரசியல் ஆகட்டும், பொருளாதாரம் ஆகட்டும், அனைத்திலுமே தொழில்நுட்பத்தின் தாக்கம் காணப்படுகிறது. இதில் உள்ள முறிவுகள், பிரிவினைகள் மற்றும் தடைகள் போன்றவை முன்னேற்றமின்மைக்கான அடையாளமாக காணப்படுகிறது. பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் மற்றும் மனிதர்களின் சுயநல இயல்பு ஆகிய இவை மூன்றும் மனிதகுலம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால்களாகும்.
இந்த உலகின் பொருளாதார வளர்ச்சியை நாம் விரைவுப்படுத்த வேண்டியுள்ளது. எங்கள் நாட்டு மக்கள் மற்றும் அண்டைநாட்டு மக்கள் துயரங்களில் சிக்கி தவிக்கும்போது முதலில் கவனித்து, கைகொடுக்கும் நாடாக இந்தியா உள்ளது. பிளவுப்பட்ட உலகத்தில் மிகப்பெரிய அதிகாரம் படைத்த நாடுகளுக்குள் கூட்டுறவு உருவாவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.

செல்வத்துடன் நலமாக நீங்கள் வாழ வேண்டுமானால் இந்தியாவுக்கு வாருங்கள். ஆரோக்கியத்துடன் முழுமையான வாழக்கையை வாழ வேண்டுமென்றால் இந்தியாவுக்கு வாருங்கள். வளங்களுடன் அமைதியும் பெற விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள். உங்களது வருகை எப்போதும் நல்வரவாக அமையட்டும் என்று பேசினார்.

Leave a Response