நாய்களோடு மனிதர்கள் பேசலாம்.. புதிய தொழில்நுட்ப முயற்சியில் விஞ்ஞானிகள்..

top-coastal-walks

சமீபகாலமாக நம் வாழ்க்கையில் தொழில்நுட்பம், மிகப்பெரிய மேம்பாட்டு வளர்ச்சியை பெற்று வந்தாலும், நாம் சார்ந்துள்ள குடும்ப அமைப்புகளுக்கு அதை குறித்த தங்களின் மனநிலையில் இருந்து வெளியே வருவதற்கு தயங்குவது ஏன் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், விலங்குகளின் குரல் மாற்றங்கள் மற்றும் முகப் பாவனைகளை ஆங்கிலமாக மொழிமாற்றம் செய்து படிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தும் ஒரு கருவியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மற்ற ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளோடு இணைந்து செயல்படும் தனது ஆராய்ச்சியின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தங்கள் எஜமான்களுடன் விலங்குகள், ஒரு ‘செல்லப் பிராணி மொழிபெயர்ப்பாளர்’ மூலம் பேசுவார்கள் என்று நம்புவதாக கூறுகிறார்.

அவர் கூறுகையில், இயந்திரத் தன்மையோடு கூடிய ஆய்வின் மூலம் ஒரு நாய் உறுமுவது அல்லது வால் ஆட்டுவதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை கம்ப்யூட்டர்களால் கண்டறிந்து, நமக்கு கூற முடியும். அவற்றின் தேவையை சரியாக புரிந்து கொண்டால், எதிர்காலத்தில் விலங்குகளோடு பழகுவதற்கான தகுந்த திறனை மனிதர்கள் பெற்றிருப்பார்கள், என்றார். இது குறித்து ஸ்லோபோட்சிச்சோஃப் கூறுகையில், “இது போன்ற தொழில்நுட்பம் மூலம் நாய்களைக் குறித்தும் அவற்றின் பழக்கவழக்கங்களைக் குறித்தும் மனிதர்களுக்கு சிறப்பாக புரிந்து கொள்ள முடியும். நாய்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடைத்து வைக்காமல், அவைகளுக்கு அதிக இடத்தை அளிக்கும் வகையில், மேற்கூறிய தகவல்களை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்” என்றார்.

Leave a Response