ராமர் கோயிலை ஆதரித்த முஸ்லீம் பெண் வீடு எரிப்பு

ramer kovil ikra

ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்து, மாவட்ட கலெக்டரிடம் கடிதம் கொடுத்த முஸ்லிம் பெண் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீவைத்த பின்னர், கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றனர். ஆதரவு கடிதம் உத்தர பிரதேச மாநிலம் ஹபுர் மாவட்டத்தை சேர்ந்தவர் இக்ரா. இவர் முஸ்லிம் பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிரான குழுவின் மாவட்ட தலைவராக உள்ளார். அவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் கடிதம் அளித்தார். இதனையடுத்து அவருக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் இரவு வீட்டை தீவைத்து எரித்தனர். மேலும், ‛தற்போது உதவிக்கு ராமரை அழைத்து கொள்ளுங்கள்’ என கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாக இக்ரா தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக அவர், அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றச்சாட்டு இக்ரா கூறியதாவது: கடந்த டிசம்பர் 6 ம் தேதி ராமர் கோயிலுக்கு ஆதரவாக மாவட்ட கலெக்டரிடம் கடிதம் வழங்கினேன். அப்போது முதல் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என சிலர் மிரட்டினர்.

ஊரை காலி செய்து செல்லும்படியும் கூறினர். மிரட்டல்காரர்களால் நான் கொல்லப்படுவேன் என்ற அச்சமும் உள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த விவகாரத்தை போலீசார் அமுக்க பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். மறுப்பு இதனை மறுத்துள்ள டிஎஸ்பி ராஜேஸ் குமார், விசாரணை நடந்து வருகிறது. எந்த மிரட்டல் கடிதத்தையும் இக்ரா வழங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response