உலகம் முழுவதும் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் பல தலைவர்கள் வாழ்த்து.

Tamil-Daily-News-Paper_3857952356339

இந்த ஆண்டு பருவமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால் உழவர்கள் உற்சாகமாக பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். வீட்டு வாசல்களில் கோலமிட்டு பொங்கல் வைத்து சூரியபகவானை வணங்கினர்.தமிழகம் முழுவதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சிப் பெருக்குடனும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நேற்று போகியுடன் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பேருந்து, ரயில் மற்றும் வாகனங்களில் பல லட்சம் பேர் புறப்பட்டுச் சென்றதால் கூட்டம் அலைமோதியது.பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மும்பையின் சியோன் – கொலிவாடா பகுதியில் வசிக்கும் தமிழர்கள், பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை கொண்டாடினர். அப்பகுதி பெண்கள் ஓரிடத்தில் கூடி பொங்கல் வைத்து, வழிபாடு நடத்தினர். சென்னை போயஸ் கார்டனில் தனது வீட்டு வாயிலில் கூடியிருந்த ரசிகர்களை ரஜினி நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அனைவரும் செழிப்புடன் சிறப்பாக வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.அதுமட்டும் இல்லாமல் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும். சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

Leave a Response