குவிந்தன புத்தகம்..! சென்னையில் 41-வது புத்தக கண்காட்சி தொடக்கம்.

book

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், புத்தக ஆர்வலர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, வாசிப்பைப் பரவலாக்கவும், விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் 1976-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி தொடங்கப்பட்டது.40-வது புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு,தமிழ்நாட்டிலேயே மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்தத் திருவிழா,80 சதவிகிதம் அளவுக்கு தமிழ் மொழி புத்தகங்களும் , 20 சதவிகித புத்தகங்கள் பிற மொழிகளிலும் அரங்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.கண்காட்சியில் 700 அரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.குடும்பத்தினர் தினமும் வந்து செல்ல ரூ.100 சீசன் நுழைவு சீட்டுகளும்,கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களும் வர விரும்புவோர்களுக்கு ரூ.50 சீசன் நுழைவு கட்டணச் சீட்டுகளும்,நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.40-வது புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, இந்த முறை புதியதாக ஸ்மார்ட் போன் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலியை கூகுல் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, எந்த எண்ணில் எந்த அரங்கு இருக்கிறது என்ற தகவலைப் பெற முடியும்.

இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடப்பற்றாக்குறை ஏற்படாத வகையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளிக்கு எதிரில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரியில் வாகனங்களை நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புத்தகக் கண்காட்சி தினமும் மதியம் 2.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் நடைபெறும். கண்காட்சி முழு ஏற்பாடுகளையும் பபாசி குழுவே செய்து வருகிறது என அதன் தலைவர் வயிரவன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாச்சலம் ஆகியோர் தெரிவித்தனர்.பாரம்பரிய இசையைப் போற்றும் வகையில் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் 13 நாட்களும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சி நடக்கும் அனைத்து நாட்களும் தலைசிறந்த ஆளுமைகள், சொற்பொழிவாளர்கள், திரைத்துறையைச்சார்ந்தவர்கள், கவிஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.இந்தமுறை புத்தகப் பிரியர்களுக்கு விருந்து படைக்கும் திருவிழாவாக புத்தகக் கண்காட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response